“அய்யோ கொடுமையே..” நடைப்பயிற்சி சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்… புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த காட்டு யானை… ஒரு நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கொடுமையே..” நடைப்பயிற்சி சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்… புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த காட்டு யானை… ஒரு நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!!

Published

on

பெங்களூருவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள தொட்டபெளே பகுதியில், 60 வயதான நாகராஜு என்பவர் வழக்கம்போல் தனது மகளுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்குள் சென்ற நிலையில், நாகராஜு மட்டும் அங்குள்ள குடியிருப்பு வளாகத்தின் அருகில் தனியாக நடந்துகொண்டிருந்தார். அப்போது புதரில் இருந்து திடீரென வந்த ஒரு காட்டானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடந்த குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் யானையைப் பார்த்து அக்கம் பக்கத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் காட்டு யானை நடமாடிய காட்சிகள் பதிவாகியுள்ளன. பன்னேருகட்டா வனப்பகுதியில் இருந்து தப்பி வந்ததாகக் கருதப்படும் இந்த யானையைச் செர பிடிப்பதற்காக வனத்துறையினர் சிறப்புப் படைகளுடன் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

காட்டானை தாக்குதலால் உயிரிழந்த நாகராஜுவின் குடும்பத்திற்கு, கர்நாடக அரசு சார்பில் உரிய நிவாரண உதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காட்டானையை உடனடியாகப் பிடித்து அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in