“அடேங்கப்பா… 70 வயசுல இப்படி ஒரு தைரியமா..?!” 12 மணி நேர மரண போராட்டத்திற்குப் பின் உயிர்தப்பிய பாட்டி..! நடுங்க வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா… 70 வயசுல இப்படி ஒரு தைரியமா..?!” 12 மணி நேர மரண போராட்டத்திற்குப் பின் உயிர்தப்பிய பாட்டி..! நடுங்க வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!!

Published

on

ஒடிசா மாநிலத்தின் கேந்திராபாரா மாவட்டத்தைச் சேர்ந்த கலாகண்ட் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான கேசி தலை என்பவரின் வியக்கத்தக்க துணிச்சல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் பிராம்மணி ஆற்றின் கரைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர் சென்றிருந்தார். ஆற்றுப்பகுதியின் வழவழப்பான மற்றும் மேடு பள்ளமான நிலப்பரப்பை அறியாமல் அவர் கால் வைத்தபோது, எதிர்பாராதவிதமாக நழுவி ஆற்று நீரில் விழுந்தார். உடனே ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர், அதில் இருந்து தப்பிக்க முயன்றும் வெள்ளப்பெருக்கு அவரைத் தொடர்ந்து அடித்துச் சென்றது.

அந்தப் பாட்டி, சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பிராம்மணி ஆற்றின் சீற்றமிக்க வெள்ளத்தில் மிதந்தபடியே உயிருக்குப் போராடியுள்ளார். இந்த நேரத்தில் ஆற்றின் வேகமான நீரோட்டம் அவரை அவரது கிராமத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டாமுண்டாய் பகுதிக்கு அடித்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை காலை பட்டாமுண்டாய் பகுதிக்கு அருகே வந்தபோது, படகில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக் கண்டு, உதவி கேட்டுத் தனது கைகளை உயர்த்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார்.

Advertisement

ஆற்றில் ஒரு பெண் மிதப்பதைக் கண்ட அந்த இரண்டு இளைஞர்களும் உடனடியாகப் படகில் சென்று அவரை மீட்டு வெளியே எடுத்தனர். நீண்ட நேரம் நீரில் இருந்ததால் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவருக்கு, உடுத்துவதற்கு ஆடைகளையும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்தப்பினார். ஒடிசாவில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் பிராம்மணி ஆற்றின் பெருவெள்ளத்திற்கு இடையே, 70 வயது மூதாட்டியின் இந்தத் துணிச்சலான மீட்புச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in