CRIME
“வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது..?” 32 வயது சித்தியுடன் லிவ்-இன் உறவு.. கர்ப்பமானதும் 22 வயது இளைஞர் செய்த கொடூரக் காரியம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிந்தாயகா பகுதியில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு வீட்டின் புல்வெளியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியைச் சேர்ந்த பிரவேஷ் ராவத் என்ற 22 வயது இளைஞர், உறவுமுறையில் தனது சித்தியான 32 வயது கிரண் ராவத் என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்பு வைத்திருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சித்தியை ஜெய்ப்பூருக்கு அழைத்து வந்த அவர், அங்குள்ள பிரெஸ்டீஜ் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் உறவில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கிரண் கர்ப்பமடைந்ததை அடுத்து, அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதானா என்ற சந்தேகம் பிரவேஷுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடந்த செப்டம்பர் 23 அன்று கிரணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை வீட்டின் புல்வெளியிலேயே குழி தோண்டிப் புதைத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் போலீஸார் உடலைக் கைப்பற்றினர். கொலைக்குப் பின் கிரைம் சீரியல்களைப் பார்த்து தப்பிக்கத் திட்டமிட்ட பிரவேஷை, போலீஸார் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் வைத்து அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
