CRIME
“காரில் கூட்டிட்டு போய் வன்கொடுமை செஞ்சார்..” பாதிக்கப்பட்ட சிறுமியின் திடுக்கிடும் வாக்குமூலம்.. ‘ஜெம்’ வீரமணியின் அடுத்த பகீர் முகம்..!!
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்துள்ள சமீபத்திய புகார் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கல்விக்கு நிதியுதவி செய்வதாகக் கூறி, தன்னைக் காரில் அழைத்துச் செல்லும் போதே வீரமணி காருக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக அச்சிறுமி தனது வாக்குமூலத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தத் தீவிரக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தங்களது விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை பல சிறுமிகள் வீரமணியால் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், காவல்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நபரால் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லத் தயங்கும் பெண்கள் அல்லது சிறுமிகள் 9345319676 என்ற பிரத்யேகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்வந்து புகாரளிப்பவர்களின் அடையாளம் மற்றும் விபரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
