CRIME
“அடச்சீ… மனுஷனுங்களாடா நீங்களாம்…?!” திருவிழாவிற்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… மிரட்டலுக்கு அஞ்சாமல் போலீசில் பாய்ந்த குடும்பம்..!!
உத்தரப் பிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தின் திலாரி காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற நவமி திருவிழாவின்போது, ஒரு தலித் பெண் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரனுடன் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் பெண்ணை வழிமறித்து, வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத கரும்புத் தோட்டத்திற்கு கடத்திச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 24 மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்த குற்றவாளிகள், கரும்புத் தோட்டத்தில் வைத்து அவரிடம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ககன் என்ற மூன்றாவது நபரும் இந்த கொடூர சம்பவத்தில் இணைந்துள்ளார். இதன்பின், சுயநினைவிழந்த நிலையில் இருந்த அப்பெண்ணை கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். பெண் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
சுயநினைவு திரும்பிய பெண், படுகாயங்களுடன் வீடு திரும்பி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், இந்த விவகாரத்தை பஞ்சாயத்து அமைத்து சமரசமாக முடிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும், அந்த அழுத்தங்களுக்கு பணியாத பெற்றோர், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரி முன்னிலையில் பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, தீவிரப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
