LATEST NEWS
“தலைமையை நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன் ” அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் MLA பரபரப்பு அறிக்கை..!!
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்து, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் “தற்போதைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பல பேர் உண்டு . அவர்களில் நானும் ஒருவன்” என்று கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கட்சியில் தகுதியான மூத்த தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும், தலைமை ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நலனை விட தனிநபர் சுயநலத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால் இனி இக்கட்சியில் தொடர்வது பயனற்றது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் விலகல்கள் மற்றும் உட்கட்சித் தலைமை மீதான வெளிப்படையான விமர்சனங்கள், வரவிருக்கும் தேர்தல் களத்தில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், விலகிய நிர்வாகிகள் மாற்று
