CRIME
நள்ளிரவில் பயங்கரம்.. சிக்னலில் வேகத்தைக் குறைத்த வாலிபர்… பின்னால் அசுரவேகத்தில் வந்து ஏறிய லாரி.. கதறும் குடும்பத்தினர்.. நெஞ்சை உலுக்கும் விபத்து..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா கிரிக்கெட் மைதானம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், மென்பொருள் நிறுவன மேற்பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதுரவாடா சந்திரம்பாலெம் துர்கா நகரைச் சேர்ந்த கே. அவினாஷ் (30) என்ற வாலிபர், அங்குள்ள ஐடி எஸ்இஇசட் ஹில் நம்பர்-2 பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை நள்ளிரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
மதுரவாடா கிரிக்கெட் மைதானத்திற்கு எதிரே உள்ள சிக்னலில் சாலையைக் கடப்பதற்காக அவினாஷ் தனது இருசக்கர வாகனத்தின் வேகத்தைக் குறைத்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த சத்தீஸ்கர் மாநிலப் பதிவு எண் கொண்ட லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக அவினாஷின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் கோரத் தாக்கத்தால் அவினாஷ் அந்த லாரியின் அடியில் சிக்கி சுமார் 200 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
