LATEST NEWS
“காப்பாத்துங்க… இல்லனா செத்துடுவேன்..” தினமும் ப்ரீயா கேட்டு மிரட்டுறாங்க… கண்ணீருடன் கதறும் பானிபூரி கடைக்காரர்..! இணையத்தில் வைரலாகும் உருக்கமான வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், ஷாருக் என்பவன் தினமும் தனது கடைக்கு வந்து இலவசமாகப் பானிபூரி சாப்பிடுவதாகவும், அதற்குப் பணம் கேட்டால் தன்னைத் தாக்கி, கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
“இவனைத் தட்டிக்கேட்க முடியாத நிலையில் உள்ளேன், தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள், இல்லையென்றால் நான் உயிரை விட்டுவிடுவேன்” என அவர் வெளியிட்டுள்ள உருக்கமானப் பதிவு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் மற்றும் பாலி மாவட்ட காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
