CRIME
“சமோசா வாங்கி வரலைன்னு இப்படியா..?” ஆத்திரத்தில் தாய் வீட்டை கூப்பிட்ட மனைவி.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூர கதி.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், மாலை நேரத்தில் சமோசா வாங்கி வர கணவர் மறந்ததால் ஏற்பட்ட சிறு குடும்பத் தகராறு, பெரிய அடிதடி சண்டையாக மாறி கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புதிதாகத் திருமணமான அந்தப் பெண், தனது கணவரிடம் சூடாகச் சமோசா வாங்கி வருமாறு கேட்டுள்ளார்; ஆனால் கணவர் அதனை வாங்கி வர மறந்து வீட்டிற்குத் திரும்பியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை எல்லை மீறிச் சென்றதால், ஆத்திரமடைந்த மனைவி தனது தாய் வீட்டினரைத் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டபோது, வாக்குவாதம் மேலும் முற்றி வன்முறையாக வெடித்தது. கோபத்தின் உச்சத்தில் இருந்த மனைவியும் அவரது வீட்டாறும் சேர்ந்து கணவனையும் அவரது குடும்பத்தினரையும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கணவர் சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “மனைவி கேட்கும் தின்பண்டங்களை கணவர்கள் சரியான நேரத்திற்கு வாங்கித் தராவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும்” என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என நெட்டிசன்கள் கிண்டலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
