CRIME
“தற்கொலையா..? இல்ல கொலையா..?” சிகரெட் சூடு, ரத்தக் காயங்கள்… காதலி வீட்டில் சடலமாகக் கிடந்தகாதலன்.. நடும்ம வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள அவத் கிரீன் அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து, 27 வயதான உணவகம் மற்றும் கஃபே உரிமையாளர் சிவா சர்மா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து, சிவாவின் தாயார் ரஞ்சனா சர்மா தனது மகனின் காதலியும் சமூக வலைதளப் பிரபலமுமான ஷ்ரத்தா துபே மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்துப் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது மகனை விருப்பத்திற்கு மாறாக உறவில் இருக்குமாறு ஷ்ரத்தா கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்தால் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு அவமானப்படுத்துவதாக மிரட்டி, கடந்த சில மாதங்களாகப் பணப் பறிப்பு மற்றும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தாயார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பாக, சிவாவின் தாயாருக்கு முதலில் வந்த தொலைபேசி அழைப்பில் அவர் பால்கனியில் இருந்து விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், சிவாவின் தாயார் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றபோது, ஷ்ரத்தாவின் ஓட்டுநர் டேனிஷ் என்பவரால் சிவா அங்கேயே கைவிடப்பட்டு ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. சிவாவின் உடலில் சிகரேட்டால் சுடப்பட்ட காயங்கள் மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கான தழும்புகள் இருந்ததாகக் கூறும் அவரது குடும்பத்தினர், அவர் பால்கனியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து ஹஸ்ரத்கஞ்ச் போலீஸார் ஷ்ரத்தா துபே, அவரது சகோதரி ராஷ்மி துபே, ஓட்டுநர் டேனிஷ், மற்றும் ஆதில் உட்பட பலர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீஸார், இது திட்டமிடப்பட்ட கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர். சிவாவின் உடலில் உள்ள காயங்களின் உண்மைத் தன்மை மற்றும் அவரது மரணத்திற்கான மருத்துவக் காரணம், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையின் முடிவிலேயே அதிகாரப்பூர்வமாகத் தெரியவரு
