காலையிலேயே ஷாக்..! “கூட்டணியை விட்டே விலகுவோம்”.. ஒரே மாதத்தில் முடிவை மாற்றிய விசிக… கடும் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஷாக்..! “கூட்டணியை விட்டே விலகுவோம்”.. ஒரே மாதத்தில் முடிவை மாற்றிய விசிக… கடும் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில்’ பாட்டாளி மக்கள் கட்சி இணையக்கூடும் என்ற யூகங்களும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் துணை முதலமைச்சர் பதவியைக் கேட்டதாக வெளியான தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், “சாதியவாத பாமக மற்றும் மதவாத பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒருபோதும் இடம்பெறாது” என்று விசிகவின் முக்கிய நிர்வாகிகளும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர் . பாமக தவெக கூட்டணிக்குள் வந்தால் தாங்கள் கூட்டணியை விட்டு உடனடியாக வெளியேறுவோம் என்று விசிகவின் பிரகடனமாகவே முன்வைக்கப்பட்டுள்ளது .

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தவெக உருவாக்கிய கூட்டணியில் விசிகவின் கருத்தியல் மற்றும் திருமாவளவனின் வழிகாட்டுதல் மிக முக்கியப் பங்காற்றியதாகப் பேசப்பட்டது . குறிப்பாக, தவெக முதலில் முன்மொழிந்த ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என விசிக வலியுறுத்தி அதனைச் சேர்க்க வைத்தது. ஆனால், தற்போதைய அரசியல் நகர்வுகளில் தவெகவின் வெற்றிக்கு பாமகவின் வாக்குகள் தான் காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி, கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தைக் குறைக்கச் சில முயற்சிகள் நடப்பதாகத் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in