“என்னடா விசித்திர கூத்தா இருக்கு..!” ஏடிஎம்மை உடைக்க கொள்ளையர்கள் போட்ட ஸ்கெட்ச்.. போலீஸாரையே குழப்பிய ‘நைட்டி கேங்’.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னடா விசித்திர கூத்தா இருக்கு..!” ஏடிஎம்மை உடைக்க கொள்ளையர்கள் போட்ட ஸ்கெட்ச்.. போலீஸாரையே குழப்பிய ‘நைட்டி கேங்’.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நைட்டி அணிந்த மர்ம நபர்கள் சிலர், அதிநவீன கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. காமரெட்டி-பன்ஸ்வாடா பிரதான சாலையில் உள்ள காந்தாரி மண்டல தலைமையகத்தில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இந்த துணிகரக் கொள்ளை நடந்துள்ளது. நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி மற்றும் நைட்டி அணிந்து வந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் சில நிமிடங்களிலேயே கட் செய்து, அதிலிருந்த மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர்.

இந்த விநோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவத்தின் முழுமையான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கொள்ளையர்கள் நைட்டி அணிந்து வந்ததோடு மட்டுமில்லாமல், தப்பிச் செல்வதற்குக் கார் அல்லது ஆம்புலன்ஸ் போன்ற வாகனத்தைப் பயன்படுத்தியதும் சிசிடிவி காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. காலையில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காந்தாரி போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in