LATEST NEWS
“இனி இவனோடு தான் வாழ்வேன்” தினமும் அந்த வார்த்தையை சொல்லி திட்டுறாரு… 3 குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு காதலனுடன் ஓடிவந்து திருமணம் செய்துகொள்ளத் துடிக்கும் பெண்..!!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் சவுத்ரி என்ற பெண், தமக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதில் மூத்த மகளுக்கு 12 வயது ஆவதாகவும் தெரிவித்துள்ளார். தன் கணவர் தன்னைத் தொடர்ந்து அடிப்பதாகவும், சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாகவும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், “நீ யாருடன் பேசுகிறாயோ, அவர்களே உனது செலவுகளைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கணவர் அடிக்கடி கூறித் துன்புறுத்தியதாகவும் அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
கணவனின் தொடர்ச்சியான தொல்லைகளாலும் குடும்ப வன்முறையினாலும் மனமுடைந்து போன அந்தப் பெண், கடுமையான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, தன் கணவரை விட்டுப் பிரிந்து ராம் லக்கன் குஜ்ஜார் என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இனிவரும் காலங்களில் ராம் லக்கன் குஜ்ஜாருடன் மட்டுமே தனது வாழ்க்கை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்காக இன்று வந்துள்ளதாகக் கமலேஷ் சவுத்ரி அறிவித்துள்ளார். குடும்பச் சூழல் மற்றும் கணவனின் சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையின் காரணமாக, மூன்று குழந்தைகளின் தாயான இவர், தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நோக்கில் இந்தத் அதிரடி முடிவை எடுத்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
