“போனுக்கு ரீசார்ஜ் பண்ணப்போனா 10,000 கோடியா..?!” ஸ்கிரீனைப் பார்த்து உறைந்துபோன இளைஞர்..! தூக்கிவாரிப் போட வச்ச மெடிக்கல் கடை ஊழியரின் அதிர்ச்சி அனுபவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போனுக்கு ரீசார்ஜ் பண்ணப்போனா 10,000 கோடியா..?!” ஸ்கிரீனைப் பார்த்து உறைந்துபோன இளைஞர்..! தூக்கிவாரிப் போட வச்ச மெடிக்கல் கடை ஊழியரின் அதிர்ச்சி அனுபவம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் கான் (22). இவர் அங்குள்ள சலாசர் பேருந்து நிலையம் அருகே உள்ள நிர்மல் மெடிக்கல் பாயிண்ட் என்ற மருத்துவக் கடையில் பணியாற்றி வருகிறார். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர், அண்மையில் தனது செல்போனுக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய முடிவு செய்து, அக்கவுண்டில் எவ்வளவு இருக்கிறது என பார்த்துள்ளார். வங்கி செயலியில் பேலன்சை பார்த்த போது, கணக்கில் இருப்புத் தொகை பூஜ்ஜியமாகக் காட்டியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கணக்கின் விவரங்களைச் சரிபார்த்தபோது, தனது வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகைக்கு வங்கியில் முடக்க உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. மேலும், அவரது கணக்கில் ஏற்கெனவே இருந்த ரூ.55 ஆயிரம் பணத்தையும் அவரால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தனது முதலாளி தீரஜ் சர்மாவிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு, இருவரும் சிகார் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு வங்கியை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வங்கி நிர்வாகம் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து, அவரது உண்மையான கணக்குத் தொகையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. இதுகுறித்து சமீர் கான் கூறுகையில், தனது வங்கிக் கணக்கில் சுமார் ரூ.55 ஆயிரம் இருந்ததாகவும், திடீரென ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் முடக்கப்பட்டதாகக் காட்டியதால் தன்னிடம் இருந்த பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in