மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..! நாகா இன நபரின் தலையை வெட்டி கடத்தல்… 48 மணி நேரக் கெடு விதித்து நாகா அமைப்பு எச்சரிக்கை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..! நாகா இன நபரின் தலையை வெட்டி கடத்தல்… 48 மணி நேரக் கெடு விதித்து நாகா அமைப்பு எச்சரிக்கை..!

Published

on

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் நாகா இனத்தைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அஜின்பாவ் ஆர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது, அவரது துண்டிக்கப்பட்ட தலையைக் குக்கி கிளர்ச்சியாளர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூர் கூட்டுப் பழங்குடியினர் சபை என்ற நாகா அமைப்பு, குக்கி கிளர்ச்சியாளர்கள் எடுத்துச் சென்ற தலையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என்று கடுமையான கெடு விதித்துள்ளது. தவறும்பட்சத்தில், தலை துண்டிக்கப்பட்ட அந்த உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், உடலை வைத்துச் செய்யப்படும் எந்தவொரு அநாகரிகச் செயலும் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் நாகா சபை எச்சரித்துள்ளது.

Advertisement

மணிப்பூரில் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தத் தலை துண்டிப்புச் சம்பவம் இரு சமூகத்தினரிடையே இருக்கும் இன மோதலை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in