“பூஜை செஞ்சா கேன்சர் சரியாகிடும்..” மருந்துக்குப் பதிலாக எலுமிச்சம்பழம்… போலி பாபாக்களை நம்பி ரூ.70 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி..! பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பூஜை செஞ்சா கேன்சர் சரியாகிடும்..” மருந்துக்குப் பதிலாக எலுமிச்சம்பழம்… போலி பாபாக்களை நம்பி ரூ.70 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி..! பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

மும்பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 51 வயது தங்கையைக் குணப்படுத்த முயன்ற 60 வயது மூத்த பெண் ஒருவர், போலி பாபாக்களின் ஏமாற்று வித்தையில் சிக்கி ரூ.69.30 லட்சத்தைப் பறிகொடுத்துள்ளார். விளம்பரம் ஒன்றைப் பார்த்து ராஜசேகர் சாஸ்திரி மற்றும் குருஜி ஆதித்யநாத் ஆகிய இரு போலி பாபாக்களை அப்பெண் தொடர்புகொண்டுள்ளார். அவர்கள், தங்கையின் வீட்டில் “செய்வினை / சூனியப் பாதிப்பு” மற்றும் கிரக தோஷங்கள் இருப்பதாகவும், சிறப்புப் பூஜைகள் செய்வதன் மூலம் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்றும் நம்ப வைத்துள்ளனர்.

பாபாக்கள் இருவரும் தங்களின் போலி சக்திகளை நம்ப வைப்பதற்காக, எலுமிச்சம்பழம் மற்றும் எஃகுப் பெட்டி போன்ற சில தந்திர வித்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலக்கட்டத்தில், அசாம்பில் உள்ள காமாக்யா கோவில் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் காசி விஸ்வநாதர் கோவில்களில் 48 மண்டல பூஜைகள் மற்றும் கிரக சாந்தி பூஜைகள் நடத்துவதாகக் கூறி சிறுகச் சிறுக பணத்தைப் பறித்துள்ளனர். தங்கையின் உடல்நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், அப்பெண் ரூ.68 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1.30 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

Advertisement

இருப்பினும், தங்கையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததே தவிர எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் பணம் கேட்டு அந்த பாபாக்கள் வற்புறுத்தியதுடன், பணம் தராவிட்டால் இதுவரை செய்த பூஜைகளின் பலன் இல்லாமல் போய்விடும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். திலக் நகர் காவல்துறையினர் ராஜசேகர் சாஸ்திரி மற்றும் குருஜி ஆதித்யநாத் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in