LATEST NEWS
“இது யார் வீட்டுக்காசு CM சார்?” வெட்கமே இல்லாம வாக்குமூலம் கொடுக்குறீங்களே.. விஜய் அரசை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தவெக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் அமைச்சரவைச் செயல்பாடுகள் மற்றும் மின்சாரக் கொள்முதல் விவகாரங்களை முன்வைத்து இந்த அரசியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதில், “இது யார் வீட்டுக்காசு சார்?” என்று தவெக அரசை நோக்கி மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை தவெக தரப்பு விலை கொடுத்து வாங்கப் போவதாக (Purchase செய்யப் போகிறோம்) வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருவதாக அவர் தனது பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவினரை விலைக்கு வாங்குவதற்காகப் பணம் பத்தாத காரணத்தினால் தான், தற்போதைய தவெக அரசு மின்சாரம் வாங்குவதில் ஊழல் செய்கிறதா என்ற பலத்த கேள்விகள் தற்போது பொதுமக்கள் மனதிலும் எழத் தொடங்கிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
