LATEST NEWS
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு மூளையில் பிரச்சினை… சீக்கிரம் மருத்துவரை போய் பாருங்க சார்.. பகீர் கிளப்பிய திமுக மாஜி ரகுபதி…!!
திமுக மற்றும் பாஜக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜகவும் திமுகவும் தமிழ்நாட்டின் முக்கிய எதிரிகள் என்பது ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்குக் கூடத் தெரியும் என்று ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல், ஆதவ் அர்ஜுனா துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு அவதூறு பரப்புவதாக அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த எளிய அரசியல் உண்மை ஆதவ் அர்ஜுனாவுக்குத் தெரியவில்லை என்றால், அவரது மூளையில் என்ன பிரச்சனை? என்று ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் ஒரு சரியான மருத்துவரைப் போய்ப் பார்ப்பது நல்லது என்றும் என விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
