CRIME
“ஆளுநர் நியமனத்தை ரத்து செய்யுங்க..!” சிக்கிம் ஆளுநருக்கு எதிராகக் கண்ணீருடன் போர்க்கொடி தூக்கிய அங்கீதாவின் தாய்.. டெல்லியில் பரபரப்பு..!!!
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அங்கீதா பண்டாரி கடந்த 2022-ஆம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் “வி.ஐ.பி” பர் யார் என்ற மர்மத்தை உடைக்க வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி வழங்கக் கோரியும் அவரது பெற்றோர் டெல்லி இண்டியா கேட் பகுதியில் விடிய விடியத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க தலைவரான துஷ்யந்த் குமார் கௌதம் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை முடிவடையும் வரை அவரது ஆளுநர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று அங்கீதாவின் தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி இண்டியா கேட் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்திய அங்கீதாவின் பெற்றோருக்கு ஆதரவாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவித்தனர். எனினும், இந்த விடிய விடிய போராட்டத்திற்குப் பிறகு டெல்லி போலீசார் அங்கீதாவின் பெற்றோரை நள்ளிரவில் கைது செய்து, பின்னர் அக்டோபர் 15 காலை 5 மணியளவில் விடுதலை செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட துஷ்யந்த் கௌதம் இந்தத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
