“குதிரை பேரத்தை தூண்டுகிறார் செங்கோட்டையன்..” ஆளுநரை நாடிய அதிமுகவின் பகீர் புகார்..! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு வெடித்தது – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குதிரை பேரத்தை தூண்டுகிறார் செங்கோட்டையன்..” ஆளுநரை நாடிய அதிமுகவின் பகீர் புகார்..! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு வெடித்தது

Published

on

அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்து. செங்கோட்டையனின் இந்தக் கருத்து அரசியல் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், ஜனநாயக முறைகளுக்கு எதிராகவும் உள்ளதாக அந்தப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முறையீடு தற்பொழுது செங்கோட்டையனுக்கு தீவிர அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in