LATEST NEWS
“அதிமுகவிலிருந்து 15 MLA-க்கள் தவெகவில் ஐக்கியமா..? செங்கோட்டையன் பேச்சுக்கு லீமா ரோஸ் கொடுத்த பக்கா மாஸ் ரிப்ளை..!!”
அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவிருப்பதாக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லீமா ரோஸ், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உறுதியாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுவோம் என்றும், கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் அனைத்தையும் அவரே உரிய முறையில் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் திட்டவட்டமாகப் குறிப்பிட்டுள்ளார்.
