LATEST NEWS
மிஸ் பண்ணிடாதீங்க.. 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை..! கடைசி தேதி நீட்டிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுத் திட்டம் தொடர்பாக அரசு புதிய அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்த நிலையில், தற்போது மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை அக்டோபர் 21-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் நவம்பர் 21-ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
