CRIME
அய்யோ கொடுமையே.. தடிகளுடன் காத்துக்கொண்டிருந்த கும்பல்.. 10 வயது மகன் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. பெரும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் கமலாபூர் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 30-ல், மனோஜ் கௌதம் என்ற நபர் பழைய விரோதம் காரணமாக ஒரு கும்பலால் தடிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. சந்தையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மனோஜை வழிமறித்த கும்பல், அவரது 10 வயது மகள் கண் முன்னாலேயே இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. படுகாயமடைந்த மனோஜை காஸ்மண்டா சமூக சுகாதார மையத்திற்குச் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவனின் உடலைக் கட்டியணைத்து கதறிய மனைவி மற்றும் தந்தையை இழந்த மகளின் அழுகுரல் அவ்வழியே சென்றவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் காவல் கண்காணிப்பாளர் அங்குர் அகர்வால் உட்படப் பல காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்தத் துணிகரப் படுகொலை தொடர்பாகச் சுபம் சிங், தீரேந்திர சிங், நரேந்திர சிங் மற்றும் இரு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நீண்ட காலப் பழைய பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
