CRIME
“புது வாழ்க்கை வாழலாம்னு கூட்டிட்டு வந்து…” பாத்ரூமில் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்.. லாட்ஜ் அறையில் கணவன் காட்டிய நயவஞ்சகம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள ‘ராஜ் பவன்’ தங்கும் விடுதியில், ரூபியா சுல்தானா என்ற நான்கு குழந்தைகளின் தாய் அவரது கணவரான நவீத் பாஷாவால் பீர் பாட்டிலால் அடித்து, கொடூரமாகத் தொண்டை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் 13 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்துள்ளனர். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நவீத் பாஷா, கஞ்சா பாக்கெட்டுகளைத் தயாரிக்கத் துணையாக இருக்குமாறு தனது மனைவியைக் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரூபியாவைக் கொலை செய்ய முயன்றதால், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நவீத் சிறைக்குச் சென்று, ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தன் மீது ஊரில் வழக்குகள் இருப்பதால் மதனப்பள்ளியில் புதிய வாழ்க்கை தொடங்கலாம் எனக் கூறி, மனைவியை நவீத் பாஷா நம்பவைத்து அழைத்து வந்துள்ளார். அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவர்கள், இரவு ஒன்றாக வெளியில் சென்று உணவருந்திவிட்டுத் திரும்பியுள்ளனர். மனைவியின் மீது எந்தச் சந்தேகமும் வராதவாறு நவீத் பாஷா பழகியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை சுமார் 4:30 மணியளவில் ரூபியா கழிவறைக்குச் சென்றபோது, பின்னாடியே சென்ற நவீத் வெற்று பீர் பாட்டிலால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். அவர் கீழே விழுந்தவுடன், உடைந்த பீர் பாட்டிலின் கூர்மையான பகுதியைக் கொண்டு அவரது தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, அதிகாலை 5 மணியளவில் தங்கும் விடுதியின் பாதுகாப்புக் காவலரைத் கதவைத் திறக்கச் சொல்லி நவீத் பாஷா நேராக மதனப்பள்ளி டவுன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்குத் தான் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கொலையுண்ட ரூபியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
