LATEST NEWS
“CM Sir, ஒரு நிமிடம் இதை கேளுங்க” 6000 பெண்களின் கண்ணீர் போஸ்டரால் பரபரப்பு… முதலமைச்சர் விஜய் முன் உருக்கமான பதாகைகள்..!!
கோவையில் நடைபெற்ற அரசுப் விழாவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ACI பெண் பணியாளர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத் திறப்பு விழாவிற்காக கோவை வந்த முதலமைச்சரைச் சந்திக்க ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் இப்பெண்கள் திரண்டு வந்திருந்தனர்.
அந்தப் போஸ்டர்களில், “CM Sir, ஒரு நிமிடம், 6000 பெண்கள்” என்ற வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தன. மேலும், முதலமைச்சரை அண்ணனாக விளித்து, “தங்கைகள், அக்காக்கள், நண்பிகள்… கண்ணீர் கோரிக்கையைக் கேளுங்கள்” என்ற உருக்கமான வரிகளும் இடம்பெற்றிருந்தன. தங்களின் நீண்ட நாள் பணி சார்ந்த வாழ்வாதாரக் கோரிக்கைகளை முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்வதற்காகவே அவர்கள் இந்த நூதன முறையைக் கையாண்டதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் விஜய்யின் கோவை ‘ரோடு ஷோ’ மற்றும் பொது நிகழ்ச்சி மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்த வேளையில், இந்த அரசுப் பள்ளிப் பெண் பணியாளர்களின் அமைதியான போஸ்டர் போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் தங்களது அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில், இந்த 6000 பெண்களின் கண்ணீர் கோரிக்கைக்கு அரசுத் தரப்பில் எடுக்கப்படப் போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
