CRIME
“திருவிழா கொண்டாடலாம் வாங்க…” நம்பிச் சென்ற கணவனுக்கு மாமனார் வீட்டில் காத்திருந்த மரணப் பொறி.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
தெலங்கானா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. தத்தா ஸ்ரீநிவாஸ் என்பவருக்குத் திருமணமாகி ஒரே ஆண்டே ஆன நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து, ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் பல பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். நேர்மையான முறையில் இந்த வழக்குகளை எதிர்கொண்டு வந்த ஸ்ரீநிவாஸ், திருவிழா ஒன்றை ஒன்றாகக் கொண்டாடலாம் என்று அழைத்த தனது மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் நம்பி மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மாமனார் வீட்டிற்குச் சென்ற தத்தா ஸ்ரீநிவாஸை, அவரது மனைவி மற்றும் மருமகன் வீட்டார் ஒன்றுசேர்ந்து கற்களாலும், செருப்புகளாலும் கொடூரமாக அடித்துத் தாக்கியதோடு, அவரது தொண்டையை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் கொடூரச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீநிவாஸைக் கொடூரமாகக் கொலை செய்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
