BREAKING : தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல்.. சற்றுமுன் கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : தவெக நிர்வாகி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதைப் பொருள் பறிமுதல்.. சற்றுமுன் கைது..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டிலேயே இவ்வளவு பெரிய அளவில் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் முடிவில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சுகன் ஆகிய இருவரையும் போலீசார் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இந்த போதைப்பொருள் நெட்வொர்க் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in