“என் திட்டம்.. என் திட்டம்னு சொன்னா..” மு.க.ஸ்டாலினின் அறிக்கைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதிலடி.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் திட்டம்.. என் திட்டம்னு சொன்னா..” மு.க.ஸ்டாலினின் அறிக்கைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதிலடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

அரசுத் திட்டங்கள் என்பவை மக்களின் வரிப்பணத்தில் அவர்களின் தேவைகளுக்காகக் கொண்டுவரப்படுபவையே தவிர, அவை எந்தவொரு தனி மனிதரின் சிந்தனையோ அல்லது உழைப்போ கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80 முதல் 90 விழுக்காடு பணிகள் முடிந்திருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு மேம்பாலத் திட்டங்களை, பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு தன் சாதனையைப் போலக் காட்டி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து கொண்டதாக அவர் சாடியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, முந்தைய அரசுகளின் நல்ல திட்டங்களான அம்மா உணவகம், காலை உணவுத் திட்டம் போன்றவற்றை மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், கோவையில் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும் தம்பட்டங்கள் ஏதுமின்றி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார் என்றும், உலகளவில் புகழ்பெற்ற அவர் தன்னை முன்னிறுத்தி பெருமை தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஆனால், அடிப்படைப் புரிதல் இன்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் த.வெ.க அரசின் திட்டங்களைத் தன்னுடயவை என்று கூறி, பொறாமையுடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெற்று விளம்பரங்களாலும் ஊழல்களாலும் வெறுத்துப்போன கொளத்தூர் மக்களே மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்ததாகக் குறிப்பிட்ட அவர், ‘பொறாமை கொண்டவரை அழிக்க வேறு பகை வேண்டாம், அந்தப் பொறாமையே அவரை அழித்துவிடும்’ என்ற வள்ளுவரின் குறளைச் சுட்டிக்காட்டி த.வெ.க அரசு மக்களின் ஆதரவோடு தொடர்ந்து வெற்றி நடைபோடும் என்று உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in