LATEST NEWS
“எல். முருகன் ராஜினாமா இல்லை, பதவி பறிப்பு..!” டெல்லி வட்டாரங்களை அதிர வைத்த பகீர் பின்னணி.. அரசியலில் திடீர் பரபரப்பு..!!
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், தனது மத்திய இணை அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி பதவியையும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்காகவும், முழுநேரக் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இருப்பினும், எல்.முருகனின் இந்த அதிரடி ராஜினாமாவின் பின்னணியில் அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என்ற மாற்றுத் தகவல்களும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அவரது அமைச்சகச் செயல்பாடுகள் மீது மத்திய தலைமைக்கு முழுமையான திருப்தி இல்லை என்றும், கடந்த ஜனவரி மாதத்திலேயே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த முடிவு, தற்போது உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அவர் மரியாதை நிமித்தமாகத் தனது ஐந்து பக்க நீளமான ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்ததாக அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் எழுந்துள்ளன.
