CRIME
“ஒத்துக்கலனா உன் மகனைக் கொன்னுடுவோம்..” வேலை விஷயமாக வெளியே சென்ற கணவன்.. தனியாக இருந்த மனைவியை மிரட்டி கொடூரம் செய்த நண்பர்கள்..! பதறவைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கணவரின் நண்பர்களான சூரஜ் யாதவ் மற்றும் விஷால் ஆகியோர் அடிக்கடி வந்து சந்தித்து சென்றனர். அப்போது வீட்டில் இருந்த நண்பரின் மனைவியை கண்டு 2 பேரும் சபலம் அடைந்தனர்.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி நண்பர் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். வீட்டில் நண்பரின் மனைவி 4 வயது மகனுடன் தனியாக இருந்தார். அப்போது கணவரின் நண்பர்களான 2 பேரும் வீட்டிற்குள் புகுந்தனர். நண்பரின் மனைவியை 2 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை அப்பெண் தடுத்தபோது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதன்பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை கணவரிடம் தெரிவித்து விரார் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கணவரின் 2 நண்பர்களையும் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
