மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினா அவ்ளோ தான்… தனியார் பள்ளிகளுக்கு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினா அவ்ளோ தான்… தனியார் பள்ளிகளுக்கு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

Published

on

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் சுயநிதி மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அரசு அறிவிக்கும் இதர விடுமுறை நாட்களில் எந்தவொரு சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று இந்த உத்தரவில் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் நேரடியாகவோ அல்லது இணையவழியாகவோ சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான விடுமுறை உரிமையைக் காக்கும் பொருட்டு இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in