ஊறுகாய் பிரியர்களே உஷார்..! தொட்டிக்குள் கிடந்த செத்த பல்லிகள்.. ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட 85,000 கிலோ அசுத்த ஊறுகாய் … ஷாக் ஆன அதிகாரிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஊறுகாய் பிரியர்களே உஷார்..! தொட்டிக்குள் கிடந்த செத்த பல்லிகள்.. ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட 85,000 கிலோ அசுத்த ஊறுகாய் … ஷாக் ஆன அதிகாரிகள்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஸ்ரீ ஷியாம் ஃபுட்ஸ்’ என்ற ஊறுகாய் தயாரிப்பு ஆலையில், அழுகிய ஊறுகாய் தொட்டிகளுக்குள் செத்த பல்லிகள், கொசுக்கள் மற்றும் சிலந்திகள் இருந்ததைக் கண்டுபிடித்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘சுத்தமான உணவு – கலப்படத்திற்கு எதிரான போர்’ என்ற திட்டத்தின்கீழ் திங்கட்கிழமை நடத்தப்பட்ட இந்த சோதனையில், சுமார் **85,000 கிலோ அளவிலான ஊறுகாய் மற்றும் அதன் மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர்.

அந்த ஆலையின் அடித்தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகளில் கேரட், எலுமிச்சை, மாங்காய் மற்றும் மிளகாய் போன்ற ஊறுகாய் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில தொட்டிகளுக்குள் செத்த பல்லிகள் கிடந்ததோடு, ஆலை முழுவதும் தூசிகள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அசுத்தமான சூழல் காணப்பட்டது. இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்த மிக்ஸ் ஊறுகாய் மற்றும் சாஸ் போன்ற உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

மனித நுகர்வுக்குப் பாதுகாப்பற்ற மற்றும் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட அந்த 85,000 கிலோ அளவிலான ஊறுகாய்களையும் அதிகாரிகள் முற்றிலும் அழித்து உத்தரவிட்டனர். மேலும், விதிகளின்படி அந்த நிறுவனத்தின் உணவு உரிமத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ஆலையின் அசுத்தமான செயல்பாடு, ஊறுகாய் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in