“ஆயுசு கெட்டி தான்” மரணக் குழியில் போராடிய உயிர்.. 800 அடி ஆழத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி – நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆயுசு கெட்டி தான்” மரணக் குழியில் போராடிய உயிர்.. 800 அடி ஆழத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி – நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் மலைப்பகுதியில், சுமார் 800 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். திங்கட்கிழமையன்று வாகமண்ணில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘நேச்சுரல் இன்ஃபினிட்டி பூல்’ என்ற நீர்நிலை அருகே இந்தத் திடுக்கிடும் விபத்து அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவரான ‘சுகியா ஜெயின்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த நீர்நிலை அருகே இருந்த குறுகலான மலைப்பாதையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி 800 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் அவரது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரால் அங்கிருந்து நகர முடியாமல் அந்த ஆபத்தான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்டார்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பள்ளத்தாக்கின் புவியியல் அமைப்பு மிகவும் கடினமாகவும், செங்குத்தாகவும் இருந்ததால் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும், ‘பீர்மேடு’ பகுதியைச் சேர்ந்த மீட்புக் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கயிறுகளின் உதவியோடு 800 அடி ஆழத்திற்குச் சென்று படுகாயமடைந்த மருத்துவரைச் சாதுரியமாக மீட்டனர்.

பள்ளத்தாக்கில் இருந்து பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்ட சுகியா ஜெயின், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த விபத்து மற்றும் அதிரடி மீட்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in