LATEST NEWS
“ALL TIME அன்பாருக்கும் என் தங்கமே…” ஹர்திக் பாண்டியாவை உருகவைத்த ரசிகர்… 2,390 கி.மீ நடந்தே வந்தவருக்கு கிடைத்த மெகா சர்ப்ரைஸ்..!!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் லக்னோவில் இருந்து பெங்களூரு வரை சுமார் 2,390 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த ரசிகரின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. தனது தீவிர ரசிகரின் இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி அவரை நேரில் சந்தித்த ஹர்திக் பாண்டியா, ரசிகருடன் அன்போடு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு தனது நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கடினமான இந்தப் பாதயாத்திரையை மேற்கொண்டு தன்னைச் சந்திக்க வந்த அந்த ரசிகருக்குப் பாண்டியா பெரும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கான அனைத்துப் பயண ஏற்பாடுகளையும் தானே செய்து தருவதாக அந்த ரசிகருக்கு ஹர்திக் பாண்டியா உறுதியளித்துள்ளார். நட்சத்திர வீரரின் இந்த அன்பான செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
