CRIME
அடச்சீ.. என்ன ஒரு கேவலமான குணம்… மருமகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு… தட்டிக்கேட்ட கணவனை சுட்டுக் கொன்ற மாமன்..! பகீர் பின்னணி..!!
பாட்னா மாவட்டம் புல்வாரி ஷெரீப் பகுதியில் மாமன் ஒருவர் தனது மருமகனை 6 முறை சுட்டுக் கொன்ற கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மருமகனின் மனைவியுடன் மாமனுக்குத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்தத் தொடர்பின் காரணமாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தை மேலும் தொடர்வதற்காகவே மாமன் தனது காதலிக்கு தனியாக ஒரு வீடையும் கட்டித் தந்துள்ளார். உல்லாசமாக இருப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த வீடும், அந்தத் தொடர்பும் மாமன்-மருமகன் இடையேயான மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தத் தகராறுகளின் முற்றிய நிலையில்தான் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள மாமனைத் தேடும் தீவிரப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
