CRIME
“அடப்பாவிகளா.. செல்போன் ஸ்டேட்டஸாக்காக இப்படியா..?” 16 வயது சிறுவனை ஜவுளிக் கடைக்குள் புகுந்து வெட்டிய கும்பல்.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
மஹாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் தலேகான் தபாதே பகுதியில், செல்போன் ஸ்டேட்டஸில் “கிங் இஸ் பேக்” என்று பதிவிட்ட தகராறில் 16 வயது சிறுவன் ஒருவன் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் தேவேந்திர ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவாஜி சௌக் பகுதியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் இச்சிறுவன் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளால் அவனைச் சரமாரியாக வெட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் தலேகான் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
ஜவுளிக் கடையில் புகுந்து சிறுவனை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டும் இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் செல்போன் ஸ்டேட்டஸ் தகராறில் 16 வயது சிறுவனை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய மூன்று குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
