மனித நேயம் சாகவில்லை.. ஓடும் ரயிலின் பின்னால் ஓடிய வடா பாவ் வியாபாரி.. அடுத்து அந்தப் பயணி செய்த காரியம்தான் இப்போ இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனித நேயம் சாகவில்லை.. ஓடும் ரயிலின் பின்னால் ஓடிய வடா பாவ் வியாபாரி.. அடுத்து அந்தப் பயணி செய்த காரியம்தான் இப்போ இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ…!!

Published

on

சமூக வலைத்தளங்களில் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில், நகரும் ரயிலின் பின்னால் ஓடி வடா பாவ் விற்ற ஏழை வியாபாரியின் உழைப்பும், அவருக்கு ஏமாற்றமளிக்காமல் ஆன்லைனில் நேர்மையாகப் பணம் செலுத்திய பயணியின் செயலும் நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகரத் தொடங்கியதும், கையில் வடா பாவ் ஆர்டருடன் ஓடிச் சென்ற இளைஞன் ஒருவன், நகரும் ரயிலின் வாசலில் நின்ற பயணியிடம் அதனை ஒப்படைக்கிறான். அதன்பின் பணத்திற்காகத் தனது சட்டைப்பையிலிருந்து கியூஆர் குறியீட்டை எடுப்பதற்குள் ரயில் நடைமேடையைக் கடந்துவிட்டதால், பணம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து அந்த இளைஞன் ரயிலையே வெறித்துப் பார்க்கிறான்.

https://www.instagram.com/reel/Dd1KuokhARu/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

ஆனால், அடுத்து நடந்த சம்பவம் இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஓடும் ரயிலில் இருந்தபோதிலும், அந்தப் பயணி உடனடியாகத் தனது கைபேசியை எடுத்து, அந்த இளைஞனின் கியூஆர் குறியீட்டைத் தூரத்திலிருந்தே ஸ்கேன் செய்து, வடா பாவிற்கான 30 ரூபாயை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். “அவர் உங்களை நம்பினார், நீங்களும் அவரது நம்பிக்கையை மதித்தீர்கள்” என்று இணையவாசிகள் பாராட்டி வரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. “பணம் அவ்வளவு எளிதாகச் சம்பாதிக்கப்படுவதில்லை” என்ற வாசகத்துடன் வைரலாகி வரும் இக்காணொளி, இன்றும் இந்த உலகம் மனிதநேயம் மற்றும் நேர்மையின் மீதுதான் இயங்குகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in