வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்தவரோடு கள்ளக்காதல்.. காலையில் வாக்கிங் சென்ற கணவருக்கு காத்திருந்த ஷாக்… மனைவியின் சதித்திட்டம் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்தவரோடு கள்ளக்காதல்.. காலையில் வாக்கிங் சென்ற கணவருக்கு காத்திருந்த ஷாக்… மனைவியின் சதித்திட்டம் அம்பலம்..!!

Published

on

கர்நாடகாவின் விஜயபுராவில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்ற ராஜசேகர் (42) என்பவர் வாகனம் மோதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண சாலை விபத்து என்று கருதப்பட்ட நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூரமான கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கொலையின் பின்னணியில் ராஜசேகரின் மனைவி அஸ்வினி (30) மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆனந்த் (25) ஆகியோர் இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வினியின் வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு வந்த ஆனந்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் ராஜசேகர் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட அஸ்வினி முடிவு செய்துள்ளார்.

Advertisement

இதற்காக அஸ்வினி தனது கள்ளக்காதலன் ஆனந்த் மற்றும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ராஜசேகர் காலை நடைப்பயிற்சி சென்ற சமயம் பார்த்து, காரால் அவரை பலமாக இடித்துக் கொலை செய்துள்ளனர். விபத்து போல நாடகமாடி ஏமாற்ற முயன்ற அஸ்வினி, ஆனந்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தற்போது கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in