LATEST NEWS
பதவிப் பறிப்பால் வெடித்த அதிருப்தி… தவெக-வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் பக்கா பிளான்..? திமுக கோட்டையில் அதிரடி ட்விஸ்ட்..!!
திமுகவின் மூத்த நிர்வாகியும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளியுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், திமுக தனது கட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்த மாவட்டச் செயலாளர்களின் வயது வரம்பை 70 ஆக மாற்றியது. இதன் காரணமாக, 74 வயதாகும் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் திமுக தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட போது, திமுக தலைமை அவருக்கு ஆதரவாகப் பேசியதே தவிர இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் கட்சியில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக உணர்ந்த அவர், தவெகவில் இணைவதற்குத் தனது விஸ்வாசியான பில்லா ஜெகனை அனுப்பி முதலில் ஆழம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. பில்லா ஜெகன் ஆரம்பம் முதலே விஜய் ரசிகராக இருந்தாலும், திமுகவிலிருந்து விலகி வருவதால் தவெக தலைமை ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ சமுதாய மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குக் கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஒரு மூத்த தலைவர் தவெகவுக்கு வந்தால், அது தென் மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்தப் பெரிதும் உதவும் எனத் தவெக தரப்பு ஆலோசித்து வருகிறது. வரவிருக்கும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்து அவரை கட்சியில் சேர்க்கும் எண்ணத்திற்குத் தவெகவும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுகவின் அதிருப்தியாளர்கள் பலர் தவெகவை நோக்கி ஈர்க்கப்பட்டால், அது தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியை உடைத்து தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
