அய்யோ கொடுமையே..! பலத்த காற்றில் பறந்த டென்ட்.. உயர் அழுத்த மின் கம்பி உரசி 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்..! கூட்டம் தொடங்குவதற்குள் நிகழ்ந்த பெரும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! பலத்த காற்றில் பறந்த டென்ட்.. உயர் அழுத்த மின் கம்பி உரசி 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்..! கூட்டம் தொடங்குவதற்குள் நிகழ்ந்த பெரும் சோகம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு முன்பு ஒரு பெரிய விபத்து நேரிட்டுள்ளது. ரெநந்தா கிராமத்தில் பஞ்சாயத்து ராஜ் தேர்தல் தொடர்பாகவும், சுமார் 150 முதல் 200 பேர் பங்கேற்புடனும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு திடீரென வீசிய பலத்த காற்றினால் வைக்கப்பட்டிருந்த டென்ட் பறக்கத் தொடங்கியது.

அங்கு இருந்த மக்கள் அந்த டென்ட் கவிழ்ந்து விடாமல் காப்பதற்காக அதன் இரும்பு குழாய்களை பிடித்துக் கொள்ள முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பைக்குகள் மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி பலத்த விபத்து ஏற்பட்டதுடன், நிகழ்விடத்தில் மோகன் மீனா மற்றும் அர்ஜுன் மீனா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

Advertisement

இந்த திடீர் விபத்தால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பிரதாப்கர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ நானா லால் அனமா அங்கு வருவதற்குள் இந்த விபத்து நடந்ததாகவும், உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in