LATEST NEWS
உஷார்.! இனி யாராவது அரசை விமர்சித்து ரீல்ஸ் போட்டால் ஆப்பு தான்.. தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை..!!
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை பொதுவெளியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ விமர்சிக்கக் கூடாது என்று அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ உத்தரவில், விதிகளை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் முகநூல், எக்ஸ் , வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள், ஊடகங்கள் அல்லது மீம்ஸ்கள் மூலமாக அரசின் திட்டங்களையோ மற்றும் கொள்கைகளையோ விமர்சித்து கருத்துப் பதிவிட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அந்த சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை பொதுவெளியில் விமர்சிக்கும் நோக்கில் நடத்தப்படும் கூட்டங்கள், விவாதங்கள் அல்லது போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கவும் இந்த உத்தரவின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் உடனடியாக பாயும் என்றும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
