CRIME
“நான் சூனியம் வைக்கல.. கதறி அழுத இளைஞர்..” சந்தேகப்பட்டு வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற அண்டை வீட்டார்..! பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம் மூசனகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலௌலி கிராமத்தில், உடல்நலம் குன்றிய அண்டை வீட்டுக்காரரின் மகளுக்கு சூனியம் செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டு ராம்கணேஷ் (30) என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று வீட்டின் வெளியே வைத்து சத்யம் காஷ்யப், ராகவேந்திர காஷ்யப் மற்றும் ராதா காஷ்யப் ஆகிய மூன்று பேரைக் கொண்ட அண்டை வீட்டுத் தம்பதியினர் மற்றும் உறவினர் அவரைத் தாக்கினர்.
இந்தத் தாக்குதலின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராம்கணேஷின் வயிற்றில் கத்தியால் பலமுறை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரது மனைவி ரச்னா அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தங்கள் மகளின் உடல்நிலை மோசமடைந்ததற்குக் காரணம் ராம்கணேஷின் தந்தை பன்னலால்தான் என்றும், அவர் சூனியம் செய்வதாகவும் சத்யத்தின் மனைவி குற்றம் சாட்டியதே இந்த வன்முறைக்குக் காரணமாகும்.
சம்பவம் குறித்து ராம்கணேஷின் மனைவி ரச்னா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சத்யம் காஷ்யப், ராகவேந்திர காஷ்யப் மற்றும் ராதா காஷ்யப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக போக்னிபூர் வட்ட அதிகாரி ராஜீவ் சிரோஹி தெரிவித்தார்.
