CRIME
“என்னை ஏமாற்றி ரகசியமாக போட்டோ எடுத்து…” போலீஸ்காரரே செய்த பகீர் காரியம்.. எஸ்பியிடம் கதறிய 17 வயது மாணவி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி ஒருவர், காவல்துறை காவலர் ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரயிலில் பயணம்போது அறிமுகமான மோஹித் என்ற அந்த காவலர், தன்னிடம் நட்பு ரீதியாக பழகி பின்னர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குற்றச்சாட்டின்படி, அந்த காவலர் அவரை ஏமாற்றி சில இடங்களுக்கு அழைத்துச் சென்று ரகசியமாக ஒளிப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த ஆதாரங்களை வைத்து மிரட்டி, தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி மற்ற நபர்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுத்தியதாக மாணவி குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காசிப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு (SP) அந்த மாணவி நீதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான காவலர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு
