LATEST NEWS
“அய்யோ கடிக்க வருதோ..?!” கடைக்குள் புகுந்த பெரிய குரங்கு.. பயத்தில் நடுங்கிய உரிமையாளருக்கு நடந்த நெகிழ்ச்சியான ட்விஸ்ட்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
ஒடிசா மாநிலத்தில் ஒரு மளிகைக் கடையில் புகுந்த பெரிய குரங்கு ஒன்று, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த கடை உரிமையாளரை நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்த அபூர்வமான மற்றும் சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடையில் அமர்ந்து கொண்டு உரிமையாளர் அமைதியாகத் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் குரங்கு ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. அதைக் கண்டதும் அருகில் இருந்த மற்றொரு நபர் பயந்துபோய் மெதுவாக அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார். கடித்துவிடுமோ என்ற பயத்தில் கடை உரிமையாளர் எங்குமே நகர முடியாமல், இருக்கையிலேயே நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.
ஆனால், அந்தப் பெரிய குரங்கோ அவருக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல், மிகவும் பாசமாக அவரது தோள் மீது கை போட்டு நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பாசப் பிணைப்பை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியானக் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், “குரங்கின் இந்த அன்பு உருக வைக்கிறது” என்றும், “கடைக்காரர் பயந்த பயம் நியாயமானதுதான்” என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
