ஒரு நடிகைக்குக் சினிமா வரலாற்றிலேயே முதல் முறை..! நயன்தாராவின் 60 அடி உயர பிரம்மாண்ட கட்-அவுட்டை பார்த்து ரெஜினா போட்ட வைரல் பதிவு..!!! – cinefeeds
Connect with us

CINEMA

ஒரு நடிகைக்குக் சினிமா வரலாற்றிலேயே முதல் முறை..! நயன்தாராவின் 60 அடி உயர பிரம்மாண்ட கட்-அவுட்டை பார்த்து ரெஜினா போட்ட வைரல் பதிவு..!!!

Published

on

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விளம்பரத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்டை கண்டு சக நடிகையான ரெஜினா வியந்து பாராட்டியுள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்க வளாகத்தில் நயன்தாராவின் இந்த 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு பெண் நடிகைக்காக இவ்வளவு பெரிய அளவில் பிரம்மாண்டமாக கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்த கட் அவுட்டின் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ரெஜினா, “ஒரு நடிகைக்காக இவ்வளவு பெரிய கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது நயன்தாராவின் மன உறுதிக்கும், அவரது வெற்றிக்கான அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த சான்று என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in