“பள்ளியிலேயே தீக்குளித்து தற்கொலை” 12-ஆம் வகுப்பு மாணவி எடுத்த பயங்கர முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பள்ளியிலேயே தீக்குளித்து தற்கொலை” 12-ஆம் வகுப்பு மாணவி எடுத்த பயங்கர முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

Published

on

டெல்லி அரசுப் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ஷாஹ்தாரா மாவட்டம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா அரசுப் பள்ளியின் பாதுகாப்பு அறைக்குப் பின்புறம் அம்மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கிருஷ்ணா நகர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், மாணவியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அம்மாணவியின் பள்ளிப் பையிலிருந்து மூன்று கடிதக் குறிப்புகளையும், சில சந்தேகத்திற்குரிய பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எனினும், அந்தப் பொருட்கள் மற்றும் கடிதங்களில் இருந்த விவரங்களை அதிகாரிகள் தற்போதைக்கு வெளியிடவில்லை.

Advertisement

இந்தத் துயரச் சம்பவத்தால் சிறுமியின் பெற்றோர், தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். மாணவி காலையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகத்தான் பள்ளிக்குச் சென்றதாக அவளது சகோதரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in