CRIME
“அவ யார்கிட்டையோ பேசுறா.. அதான்..” சந்தேகத்தால் மனைவியைக் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொன்று மரத்தூளுக்குள் மறைத்த கணவன்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!!
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம் ஜன்ஜார்பூரில் மனைவியின் மீதுள்ள சந்தேகத்தின் பெயரில் கணவன் ஒருவரால் கொலை செய்யப்பட்ட பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. குல்ஷன் காதூன் என அடையாளம் காணப்பட்ட பெண்ணைக் காணவில்லை என்பதால் அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின் போது, கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரது தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான குற்றத்தைப் பற்றி விளக்கியுள்ள ஜன்ஜார்பூர் டிஎஸ்பி சுபோத் குமார் சின்ஹா, தனது மனைவிக்கு வேறு யாருடனும் தொடர்பு இருப்பதாகக் கணவர் சந்தேகப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் காரணமாகவே இந்த கொலையை அவர் அரங்கேற்றியுள்ளார். முதற்கட்டமாக மரக்கட்டையால் குல்ஷனின் தலையில் தாக்கி அவரை மயக்கமடையச் செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்து இந்தக் கொடூரக் கொலைச் செயலைச் செய்துள்ளார்.
கொலை செய்த பிறகு ஆதாரங்களை அழிக்கக் குற்றவாளி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தனது சொந்த மரக்கடையில் உடலை எரிக்க முயன்றதுடன், யாருக்கும் தெரியாமல் இருக்கக் குழி தோண்டி மரத்தூளுக்குள் உடலை மறைத்து வைத்துள்ளார். விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தையும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கைப்பற்றி இவரைக் கைது செய்துள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் கூடுதல் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
