LATEST NEWS
“நீ என் கௌரவத்திற்கு சவால் விட்டுவிட்ட” திருமண வரவேற்பு நாளில் புதுப்பெண் கொடூரக் கொலை… மாப்பிள்ளையை நிராகரித்ததால் 3 ஆண்டுப கழித்து பழிவாங்கல்..!!
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் வரவேற்பு விழா முடிந்து கணவருடன் காரில் சென்றுகொண்டிருந்த புதுப்பெண் சபா துபைல் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 23 அன்று சமனாபாத் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, சபாவிற்கு இந்தச் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து சபா தனது கணவருடன் புகுந்த வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சமனாபாத் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்களது காரை மறித்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையின்படி , காரை நிறுத்திய கொலையாளி சபாவை நோக்கி, “வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் நீ என் கௌரவத்திற்கு சவால் விட்டுவிட்டாய்” என்று கூறிவிட்டு, அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் பேசி முடித்த மாப்பிள்ளையை சபா நிராகரித்த பழிவாங்கலாகவே இந்தத் துணிகரக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் திருமணத் தேர்வை ஏற்க மறுக்கும் இத்தகைய கொடூரச் செயல், சமுதாயத்தில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
