“ரெயில் பயணம் செய்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..” உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவு..! இன்று முதல் அமலுக்கு வந்த புதிய மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரெயில் பயணம் செய்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..” உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவு..! இன்று முதல் அமலுக்கு வந்த புதிய மாற்றம்..!!

Published

on

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்த டிராவல் இன்சூரன்ஸ் எனப்படும் பயணக் காப்பீடு, இன்று முதல் ரெயில் நிலைய கவுன்டர்களில் வாங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கும் முறையின் அடிப்படையில் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் வித்தியாசமாக மதிப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதை அடுத்து இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

இதற்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவுப் படிவத்தில் காப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரத்யேகமான பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பயணக் காப்பீடு பெற விரும்பும் பயணிகள், அந்தப் படிவத்தில் உள்ள தொடர்புடைய கட்டத்தில் தங்களின் சம்மதத்தைத் தெரிவிப்பதற்கான குறியீட்டை இட வேண்டும். மேலும், காப்பீடு தொடர்பான துல்லியமான மற்றும் உடனடித் தகவல்களைப் பயணிகள் பெறுவதற்கு வசதியாக, முன்பதிவுப் படிவத்தில் தங்களின் கைபேசி எண்ணையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். இதற்கான காப்பீட்டுக் கட்டணமாகக் குறிப்பிட்ட சிறிய தொகை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பயண தூரம் எதுவாக இருந்தாலும், எந்த வகுப்பு முன்பதிவு பெட்டியாக இருந்தாலும் அனைத்திற்கும் பொதுவாக காப்பீட்டுத் தொகை 45 பைசா. இந்த பாலிசியை எடுப்பது பயணிகள் விருப்பத்தேர்வு ஆகும். இதன்படி ரெயில் பயணத்​தின் போது ஏதேனும் எதிர்​பாராத விபத்து ஏற்​பட்​டால், அதி​கபட்​ச​மாக ரூ. 10 லட்​சம் வரை இழப்​பீடு வழங்​கப்​படும். விபத்​தினால் மரணமோ அல்​லது நிரந்​தர முழு உடல் ஊனமுற்​றால் ரூ.10 லட்​சம், நிரந்​தர பகுதி உடல் ஊனமடைந்​தால் ரூ.7.50 லட்சம், காயங்​களுக்​கான மருத்​து​வ​மனை செல​வு​கள் ரூ. 2 லட்​சம் வரை​யும், உடலை சொந்த ஊருக்​குக் கொண்டு செல்​ல  ரூ. 10 ஆயிர​ம் என இழப்​பீடு பெற முடியும். ரெயில் நிலைய கவுண்டர்கள் மூலம் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் சாதாரண பயணிகளுக்கு சமமான பாதுகாப்பை  உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் ரெயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இது அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணச்சீட்டுகளை ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் வாங்கும் முறையின் அடிப்படையில், பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் வித்தியாசமாக மதிப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பின்போது குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in