அன்பில் கைதில் திடீர் திருப்பம்..! கை கழுவிய மத்திய அரசு… தனித்து விடப்பட்டதா திமுக..? நிர்மலா சீதாராமன் சொன்ன அந்த வார்த்தை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்பில் கைதில் திடீர் திருப்பம்..! கை கழுவிய மத்திய அரசு… தனித்து விடப்பட்டதா திமுக..? நிர்மலா சீதாராமன் சொன்ன அந்த வார்த்தை..!!

Published

on

ரூ.100 கோடி ஊழல் புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மாநில காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்த வழக்கை மாநில அரசுதான் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பதால், இதில் மத்திய அரசின் சார்பில் தான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி, மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

Advertisement

மேலும், தமிழக அரசின் கடன் விவகாரம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான சர்ச்சைகள் குறித்துப் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சராக இருந்து கொண்டு ஒரு மாநிலத்தின் நிதிச் சூழல் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியாக இருக்காது என்றார். இந்த விவகாரங்களை தமிழக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சட்டமன்றத்தின் உள்ளே எடுத்துச் சென்று விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிவந்து பொதுமக்களுக்கு உண்மை நிலை தெளிவாகத் தெரியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in